கடந்த 2000ம் ஆண்டு வெளியான 'என்னவளே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா..இவர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்..இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து தென் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்..சினேகா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்..இவர் அடிக்கடி புடவையில் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.