கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்..பால் காய்ச்சும்போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காலும், மணமாகவும் இருக்கும்..சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது..உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்..தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது..வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்..பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது..பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது..சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி தேய்த்து மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை பிடிக்காது..இட்லிக்கு மாவு அரைக்கும்போது அதனுடன் சிறிதளவு சவ்வரிசி சேர்த்து அரைத்தால், இட்லி மேம்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.