மலைக்கோட்டையின் தென்கிழக்குப் பகுதியில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கோவில், ராணுவ வீரர்கள் தங்குவதற்கான பாசறைகள் மற்றும் அக்கால பீரங்கி அமைப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், மலையின் கீழே கோட்டைக் குளமும், வடக்கே அய்யன் குளமும், தெற்கே அகத்தியர் தெப்பமும் அமைந்துள்ளன.