தினத்தந்தி
பொதுவாக நாம் உணவு சாப்பிடும்போது, உணவுடன் சிறிதளவு காற்றையும் விழுங்கி விடுகிறோம். அந்த காற்று வயிற்றில் சேர்ந்து விடுகிறது. குறிப்பாக அவசரமாக சாப்பிடும் போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்று நிரம்பிய பானங்களை குடிக்கும் போது, தண்ணீரை அண்ணாந்து குடிக்கும் போது இந்த காற்று விழுங்கும் அளவு அதிகரிக்கும்.
மேலும், உணவில் வெங்காயம், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி, அவரை போன்ற காய்கறிகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவை செரிமானத்தின் போது அதிகமான வாயுவை உருவாக்கக்கூடும்.
வாயு பிரச்சினை நீங்க: மோருடன் பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து குடிக்கலாம்.
காலை மற்றும் இரவு நேரங்களில் சீரகத் தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.
சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அஷ்டாதி சூரணம் 1 கிராம் அளவு காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
காலை மற்றும் மதியம் உணவு உண்டவுடன் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு அதன் பிறகு உட்காரலாம். இரவு உணவுக்குப் பிறகும் சிறிது நடைப்பயிற்சி செய்து, ஒரு மணி நேரம் கழித்து தூங்குவது நல்லது.
இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவியாக இருக்கும்.
உணவில் மோர், தயிர், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி மற்றும் பிரண்டைத் தண்டு துவையல் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.