குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது..இதை விரும்பும் விதமாக சாக்லேட், பிஸ்கட் இரண்டையும் வைத்து சூப்பரான சுவையான மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..தேவையான பொருட்கள் : பால், சாக்லேட் கிரீம் பிஸ்கட் , கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட், சாக்லேட் சாஸ் ஆகியவை.முதலில் மிக்ஸியில் பாலை ஊற்றி, அதனுடன் கிரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்..பின்பு அதில் கிரீம் உள்ள சாக்லேட் பிஸ்கட்டை சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்..பின்னர் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சாக்லேட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறிக் கொள்ளலாம்..சுவையான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக் ரெடி. இந்த மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.