சுவையான வாழைப்பழ பஜ்ஜி செய்வது எப்படி?

தினத்தந்தி

பழ பஜ்ஜி செய்வதற்கு நன்கு பழுத்த நேந்திரம் வாழைப்பழத்தைத் தேர்வு செய்யவும்.

வாழைப்பழத்தின் தோலை நீக்கி, நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு மற்றும் 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும்.

அதனுடன் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளைத் தயாரித்த மாவில் நன்றாக முக்கிக் கொள்ளவும்.

சூடான எண்ணெயில் வாழைப்பழத் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

வெந்த பஜ்ஜிகளை எண்ணெயிலிருந்து எடுத்து, சூடாகத் தேங்காய் சட்னி அல்லது டீயுடன் பரிமாறலாம்.

கொழுக்கட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?