தினத்தந்தி
வெந்தயம் சாதம் சுவையான, எளிமையான உணவு. வெந்தயத்தின் தனித்துவமான சுவையுடன், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சாப்பாட்டு அரிசி - 200 கிராம், வெந்தயம் - 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பற்கள், சீரகம் - அரை ஸ்பூன், மஞ்சள் தூள் - அரை ஸ்பூன், மிளகாய் தூள் - 1 ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், வெந்தயம் சேர்த்துப் பொரிய விடவும்.
பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
கழுவிய அரிசியைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
சுவையான வெந்தயம் சாதம் தயார்.