ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம்: இலங்கைக்கு எதிரான சாதனைகள்!

தினத்தந்தி

1. அதிக வெற்றிகள்: இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 171 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 99 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

2. அதிகபட்ச ரன் குவிப்பு: 2009 டிசம்பர் 15-ம் தேதி அன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்தது.

3. குறைந்தபட்ச ரன் குவிப்பு: 2023 செப்டம்பர் 17-ம் தேதி அன்று கொழும்பில் நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

4. அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: 2023 ஜனவரி 15-ம் தேதி அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

5. அதிக விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி: 1984 ஏப்ரல் 8-ம் தேதி அன்றும், 2023 செப்டம்பர் 17-ம் தேதி அன்றும் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

6. அதிக ரன்கள் எடுத்த வீரர்: சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிராக 84 ஒருநாள் போட்டிகளில் 3,113 ரன்கள் எடுத்துள்ளார்.

7. அதிகபட்ச தனிநபர் ரன் குவிப்பு: 2014 நவம்பர் 13-ம் தேதி அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில், ரோஹித் சர்மா 173 பந்துகளில் 264 ரன்கள் எடுத்தார்.

8. அதிக சதங்கள்: விராட் கோலி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் அடித்துள்ளார்.

9. அதிக அரைசதங்கள்: எம்.எஸ். தோனி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 19 அரைசதங்கள் அடித்துள்ளார்.

எறும்புகள் வீட்டிற்குள் வருவது அதிர்ஷ்டமா? ஆபத்தா?