"இன்னும் ஒரு ரீல்ஸ் மட்டும்..." - உங்களை ஏமாற்றும் டோபமைனின் ரகசியம்!

தினத்தந்தி

"இன்னும் ஒரே ஒரு ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு தூங்கிடலாம்னு" நினைச்சு போனை எடுப்பீங்க. ஆனால், நேரம் பார்த்தால் நள்ளிரவு 2 மணி ஆகியிருக்கும்.

இது உங்களுக்கு மட்டும் நடக்கிற விஷயம் இல்லை. இதற்கு முக்கியக் காரணம் உங்கள் மூளையில் சுரக்கும் டோபமைன் (Dopamine) என்ற வேதிப்பொருள்.

டோபமைன் என்பது மூளையில் சுரக்கும் 'ஃபீல்-குட்' (Feel-Good) நியூரோடிரான்ஸ்மிட்டர். மகிழ்ச்சி அல்லது வெகுமதி கிடைக்கும்போது இது சுரக்கிறது.

ரீல்ஸ்களை ஸ்க்ரோல் செய்யும்போது அடுத்ததாக என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு (Anticipation) மூளையைத் தொடர்ந்து தூண்டுகிறது.

இதனால் "இன்னும் ஒரு ரீல்ஸ் மட்டும் பார்க்கலாம்" என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்து, ஸ்க்ரோல் செய்வதை நிறுத்துவது கடினமாகிறது.

தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பதால் மூளை உடனடி மகிழ்ச்சிக்கு பழகிவிடும். அதனால் படிப்பு, வேலை போன்றவற்றில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

இந்தப் பழக்கத்தைக் குறைக்க, காலை எழுந்த முதல் 1 மணி நேரமும், இரவு தூங்குவதற்கு முன் 1 மணி நேரமும் மொபைலைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

மேலும், சமூக வலைதள செயலிகளுக்கு தினமும் 30-45 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் App Timer அமைத்துக் கொள்ளுங்கள்.

போனை எடுக்க வேண்டும் என்று தோன்றினால், "இன்னும் 10 நிமிடம் கழித்து பார்க்கலாம்" என்று உங்களையே தாமதப்படுத்திப் பழகுங்கள். இதனால் ரீல்ஸ் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? பயப்பட வேண்டுமா?