இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்..நடிகையர் திலகம் படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தார்..கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் 4 படங்கள் வந்தன..இவற்றில் ஒன்றான சாணிகாகிதம் படம் ரவுடிகளுடன் மோதி அழிக்கும் அதிரடி கதாபாத்திரமாக அமைந்தது..தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, தெலுங்கில் போலோ சங்கர் ஆகிய 5 படங்கள் கைவசம் உள்ளன..மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக வருகிறார்..இந்த படத்தில் கம்யூனிஸ்டு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்..மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.