தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்..பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்..தொடர்ந்து, 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்..சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமானார்..சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.