நடிகை கயாடு லோஹர் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்..மாடலிங் செய்து தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய இவர், முகில்பேட்டே என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.