எலுமிச்சை + உப்பு நீர்: உடலுக்கு தரும் அற்புத பலன்கள்!

தினத்தந்தி

காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை, தண்ணீர் மற்றும் உப்பு கலந்து தயாரிக்கும் பானம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அந்த நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்:

உடலை ஹைட்ரேட் செய்கிறது: இந்த பானம் உடலில் நீர்ச்சத்தை பராமரித்து, நீரிழப்பைத் தடுக்கும். குறிப்பாக காலையில் குடிப்பதால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும்.

2. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: உப்பில் உள்ள மினரல்கள் மற்றும் எலுமிச்சையின் இயற்கை சத்துக்கள் இணைந்து இன்சுலின் செயல்பாட்டை ஆதரித்து, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவலாம்.

3. இரத்த அழுத்தம் மற்றும் இதய நலம்: இந்த பானம் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய துடிப்பை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.

5. செரிமானம் மேம்பாடு: இந்த பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில உற்பத்தியை தூண்டி, உணவு எளிதாக செரிமானமாக உதவுகிறது.

6. சிறுநீரக நலம்: நீரிழப்பைத் தடுக்குவதுடன், சிறுநீரக கற்கள் உருவாகுவதை குறைக்க உதவுகிறது. ஏற்கனவே உள்ள சிறிய கற்களை வெளியேற்றவும் உதவக்கூடும்.

7. கல்லீரல் செயல்பாடு & pH சமநிலை: இந்த பானம் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலின் pH சமநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது.

தயாரிக்கும் முறை: ஒரு கிளாஸ் சாதாரண தண்ணீர்,சிறிதளவு எலுமிச்சை சாறு ,ஒரு சிட்டிகை உப்பு ஆகியவை

வெயில்காலத்தில் நன்னாரி சர்பத் குடிக்கலாமா?