Subash T
கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் சுருதிஹாசன்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
நடிப்புடன் மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் சுருதிஹாசன், தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
நடிப்பு, இசை என பன்முகத் திறமையுடன் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சுருதிஹாசன், தற்போது தனது அடுத்தடுத்த படங்கள் மற்றும் இசைப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.