நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன..இதில் நிறைந்திருக்கும் அதிக அளவிலான போலேட் சத்து இதயத்தை பாதுகாப்பதோடு மாரடைப்பு ஏற்படாமலும் தடுக்க உதவுகிறது..புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கவும், அவற்றை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன..இதிலுள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது..இதில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கிறது..நுரையீரலில் தேங்கும் சளி போன்ற பிரச்சினைகளுக்கு நூல்கோல் நல்ல தீர்வைக் கொடுக்கும்.