தேவையான பொருட்கள்: பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய்த் தூள், துருவிய தேங்காய், எண்ணெய் தேவைக்கேற்ப.பச்சரிசியை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்பு நீரை வடித்து விட்டு, மாவாக்கிக் கொள்ளவும்..பின்னர் பாசிப்பருப்பை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்..அடுத்ததாக கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து, பாகு பதத்தில் காய்ச்சி இறக்கி வைக்கவும்..பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து அரைக்கவும்..பின்னர் அரிசி மாவில், அரைத்த பாசிப்பருப்பு, பாகு, ஏலக்காய்த் தூள் போட்டு பணியார மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்..வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும்..பின்னர் இருபுறமும் வெந்ததும் எடுத்து வைக்கவும். சுவையான இனிப்பு பாசிப்பருப்பு பணியாரம் தயார்.