சத்து நிறைந்த ப்ரோக்கோலி பொரியல்!

தினத்தந்தி

ப்ரோக்கோலியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ப்ரோக்கோலி பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை சாலட் போன்றும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் : ப்ரோக்கோலி - 1, வெங்காயம் - 1, பச்சைமிளகாய் -1, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கடுகு - 1/2டீஸ்பூன், உப்பு - தேவைக்கு எண்ணெய் - 1, டீஸ்பூன் ஆகியவை.

செய்முறை : வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும். ப்ரோக்கோலியை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெட்டிய ப்ரோக்கோலி துண்டுகளை ஸ்டீமரில் வைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த ப்ரோக்கோலி துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

ப்ரோக்கோலி வெங்காயத்துடன் கலந்து லேசாக சூடானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். ப்ரோக்கோலி பொரியல் ரெடி.

சப்பாத்திக்கு அருமையான மேத்தி மலாய் பன்னீர்.!