உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் சத்தான கோதுமை பாயாசம்!

தினத்தந்தி

கோதுமை நமது உடல் எடையினைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்த கோதுமையில் சுவையான பாயசம் செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: கோதுமை - 1 கப், பாதாம் பருப்பு - 3, முந்திரி பருப்பு - 3, உலர்ந்த திராட்சை - 5, வெல்லம் - 1 கப், நெய் - 2 ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 1 கப், பால் - ½ கப், ஏலக்காய்த்தூள் - 1 ஸ்பூன்.

செய்முறை: கோதுமையை லேசாக உடைத்து, அதன் மேல் தோல் நீங்கும் வரை ஒன்றிரண்டு முறை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் குக்கரில் போட்டு 3 விசில் வரை வேக வைத்து எடுத்து வைக்கவும்.

வாணலியில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதே பாகில் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்றாக கிளறவும்.

மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூளை வறுத்து, வெல்லக் கலவையில் சேர்க்கவும்.

அதன்பின் பால் மற்றும் வேகவைத்த கோதுமையை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கிளறி இறக்கவும்.

சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கும். இப்போது மணமணக்கும் சுவையான கோதுமை பாயாசம் தயார்.

இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி தெரியுமா?