பப்பாளிப்பழ மில்க் ஷேக்!

Dailythanthi

பழுத்த பப்பாளிப்பழத்தை வைத்து சுவையான, எளிமையான மில்க் ஷேக் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பழுத்த பப்பாளிப்பழம் – ½, தேங்காய்ப்பால் – 1 கப், வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – ¼ கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை: பப்பாளிப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பப்பாளித் துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.

தேங்காய்ப்பாலை ஊற்றி, ஏலக்காய்த்தூளையும் சேர்க்கவும். அனைத்தையும் லேசாக அரைத்துக்கொள்ளவும்.

தயாரான மில்க் ஷேக்கை ஃபிரிட்ஜில் வைத்து நன்கு குளிர வைக்கவும்.

நன்கு குளிர்ந்ததும் பரிமாறினால் சுவையான பப்பாளிப்பழ மில்க் ஷேக் தயார்.

வேர்க்கடலை பூர்ணம் போளி செய்வது எப்படி?