அப்போது பேசிய பிரதமர், "ஸ்ரீ காலாராம் கோவிலில், சுவாமி ஏகநாதர் மராத்தியில் எழுதப்பட்ட ராமாயணத்தின் வசனங்களை கண்டு மகிழ்ந்துள்ளார்..பின்னர் பிரபு ஸ்ரீராமர் வெற்றிகரமாக அயோத்திக்குத் திரும்பியதைச் சொல்லாட்சியாகக் கேட்டதில் எனக்கு ஆழ்ந்த அனுபவம் கிடைத்தது..பக்தியும் சரித்திரமும் எதிரொலிக்கும் இந்த பயணம் மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது" என்றார்..பின்பு,"எனது சக இந்தியர்களின் அமைதி மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்" என்று கூறியுள்ளார்..விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு சுவாமி ஏகநாதர் உருவ சிலையை கோவில் நிர்வாகத்தினர் பரிசாக வழங்கினர்..பின்னர் நாசிக்கில் உள்ள சுவாமி விவேகானந்தர் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார்.