சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் பிரக்யா, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்..கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரக்யா நாக்ரா..இவர் நடித்த 'லாக்டவுன் காதல்' எனும் குறும்படம் யூடியூப்பில் வெளியானது. இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது..தொடர்ந்து 'என் 4' என்ற திரைப்படம் மற்றும் மலையாளத்தில் வெளியான 'நதிக்காலில் சுந்தரி யமுனா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரக்யா, தனது ரசிகர்களுக்காக தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.