கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்!
Dinesh
கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது.
தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள் கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல் மற்றும் பார்வை கோளாறு போன்றவை ஆகும்.
இதற்கு முக்கியமான காரணம், கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள், கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, மற்றும் சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.