நீண்ட நாள் பயன்பாட்டுக்கு கண்ணாடி பராமரிப்பு அவசியம்!

தினத்தந்தி

டிஜிட்டல் யுகத்தில் கண் கண்ணாடி ஒரு அவசியமான பொருளாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் பயன்படுத்தும் நிலையில், அதை சரியாக பராமரிப்பது மிகவும் முக்கியம்.

உறையில் வைத்துக் கொள்ளுங்கள்: பயன்படுத்தாத நேரங்களில் கண்ணாடியை அதன் உறையில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில், கண்ணாடி பகுதி மேசையில் படாதவாறு வைக்கவும்.

இரண்டு கைகளாலும் கழற்றவும்: கண்ணாடியை கழற்றும் போது இரண்டு கைகளாலும் பிடித்து கழற்ற வேண்டும். ஒரு கையால் கழற்றினால் பிரேம் வளைந்து போகும் அபாயம் உள்ளது.

தினமும் சுத்தம் செய்யுங்கள்: பயன்படுத்தும் முன் மென்மையான துணியால் கண்ணாடியை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அவ்வப்போது சரிபார்க்கவும்: கண்ணாடியின் ஸ்க்ரூ மற்றும் இணைப்புகள் தளர்ந்துவிடாமல் இருக்க அவ்வப்போது சரிபார்த்து சரி செய்ய வேண்டும்.

மற்றவருடன் பகிர வேண்டாம்: ஒருவரின் கண்ணாடியை மற்றவர் பயன்படுத்தக் கூடாது. இது அளவு மாறி அசௌகரியம் ஏற்படுத்தும்.

கண்ணாடிகளை சரியாக பராமரிப்பது, நீண்ட நாள் பயன்பாட்டிற்கு உதவுவதோடு, கண்களின் பாதுகாப்புக்கும் முக்கியமானது.

ஐபிஎல் 2025-ல் அதிக ரன்கள் அடித்த டாப் 10 வீரர்கள்!