ரமலான் நோன்பு ஸ்பெஷல்: மட்டன் கஞ்சி செய்வது எப்படி?

தினத்தந்தி

தேவையான பொருட்கள்; அரிசி, வறுத்த சிறு பருப்பு, எலும்பில்லாத மட்டன், பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள் தூள், மசாலா தூள், மிளகாய் தூள், தக்காளி, பட்டை, ஏலக்காய், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, தேங்காய் பால், நெய்.

செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

முதலில் வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் குக்கரில் மட்டன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

மட்டன் நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் வேக வைக்கவும்.

பின்னர் அனைத்தும் நன்கு வெந்ததும் அதை சிறிது ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை, வெங்காயம் மற்றும் மசாலா தூள் சேர்த்து வதக்கி, அரைத்த கலவையில் சேர்க்கவும்.

பின்னர் அதை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடலாம்.

சுவையான ரமலான் ஸ்பெஷல் மட்டன் கஞ்சி தயாராகிவிடும்.

இன்று ருசியான மசாலா பொங்கல் செய்யலாமா?