முதல் முறையாக தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்..கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தனது 50-வது படத்தில் நடித்து வருகிறார்..இந்த படத்தை அவரே டைரக்டும் செய்கிறார்..அடுத்து தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்கும் தனது 51-வது படத்தில் நடிக்க இருக்கிறார்..இந்த படத்தில்தான் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்..ராஷ்மிகாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுசுடன் நடிப்பதை, வீடியோ வெளியிட்டு உறுதி செய்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்..இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராக இருக்கிறது..படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது..தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன..அதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்..ராஷ்மிகா ஏற்கனவே வாரிசு படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார்..சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்து இருந்தார்.