பல நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு முள்ளங்கி!

தினத்தந்தி

இதில் உள்ள போலேட் மற்றும் வைட்டமின் பி, இதயம் சார்ந்த பிரச்சினைகளை குறைக்கக்கூடும்.

சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.

ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிவப்பு முள்ளங்கியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை தேர்ந்தெடுக்கலாம். இதில் குறைவான கலோரிகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன.

நர்ச்சத்துக்கள் நிரம்பிய இந்த காய்கறி உங்களுடைய குடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து செரிமானத்தை சிறந்த முறையில் செய்ய உதவுகிறது.

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது.

ஏன் பாகற்காய் சாப்பிட வேண்டும்? சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா?