‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி..அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ படத்தில் நடித்தார்..இந்த 2 படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது..அதிதி ஷங்கர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கிவரும் புதிய படத்தில் அதர்வா தம்பி ஆகாஷூகுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்..நடிகை சூர்யா ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்..இதில் சூர்யாவுடன், அதிதி ஷங்கர் ஜோடி சேர போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.