முதுகுத்தண்டுவடம் நமது உடலில் செய்யும் முக்கிய வேலைகள்!

தினத்தந்தி

முதுகுத்தண்டுவடம் மனித உடலின் நரம்பு மண்டலத்தில் மிக முக்கியமான பகுதியாகும்.

இது மூளையிலிருந்து முதுகுப் பகுதி வழியாக கீழ்நோக்கிச் செல்லும் நரம்புத் திசுக்களின் தொகுப்பாகும்.

மூளைக்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையே தகவல்களை எடுத்துச் செல்கிறது.

கைகள், கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சூடான பொருளைத் தொட்டவுடன் கையை உடனடியாக விலக்குவது போன்ற தன்னிச்சையான எதிர்வினைகளுக்கு உதவுகிறது.

முதுகுத்தண்டுவடத்தைச் சுற்றியுள்ள முதுகெலும்புகள் அதைப் பாதுகாக்கின்றன.

முதுகுத்தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டால் உணர்விழப்பு, தசை பலவீனம் அல்லது உடல் இயக்கப் பாதிப்புகள் ஏற்படலாம்.

முதுகுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

இளைஞர்களிடம் தேசப்பற்றை வளர்க்கும் தேசிய மாணவர் படை தினம்!