நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற புதிய கட்சியை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.."2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு' - விஜய்."என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி"- விஜய்."அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்துகொள்ள என்னை தயார்படுத்தி வருகிறேன்". -விஜய்."அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தவே விரும்புகிறேன்" -விஜய்."என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படத்தை முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்"-விஜய்