தினத்தந்தி
கடல் மீன்களைத் தான் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஏரி மீன் வகைகள் நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் ஆற்று மீனான விரால் மீன் சாப்பிடவும் சுவையான மீன். மற்ற மீன்களைக் காட்டிலும் சத்துக்களும் புரதத்தின் அளவும் இதில் அதிகம்.
இது புரதம் நிறைந்த மீன் வகை ஆகும். உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் விரால் மீன் உணவுகளை அவ்வப்போது உண்டு வருவது நல்லது என்று கூறப்படுகிறது.
விரால் மீன் இறைச்சியில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.
மேலும் குழந்தைகளின் கண் பார்வை திறன், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும், எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி, கால் வலி போன்ற பாதிப்புகளை தணிக்கிறது. மூட்டு வலி, கால்வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த மீனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது தவிர, கண் பார்வை கோளாறுகளை தடுக்கும். மூளை செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும், தசை வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த அசைவ உணவு என்றால் அது மீன் தான். பொதுவாகவே மீனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிலும் இந்த விரால் மீனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனை தேவைக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வாயு அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படலாம். இருப்பினும் இது விரால் மீனுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மீன்களுக்கும் பொருந்தும்.