உணவில் கட்டாயம் தயிர் சேர்க்க வேண்டும். தயிரில் உள்ள "லாக்டோபேசில்லஸ்" என்னும் நன்மை தரும் பாக்டீரியா குடல்புண் தடுப்பிற்கு மிகச் சிறந்தது..பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து ஜூஸாக்கி குடித்து வர நோய் விரைவில் குணமாகும்..சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி அதனுடன் சிறிதளவு இஞ்சி, புதினா சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம்..நுங்கு, இளநீர் போன்றவற்றை அடிக்கடி பருகலாம்..பழங்களில் ஆப்பிள், மாதுளம் பழம், முலாம்பழம் போன்றவை மிகச் சிறந்தது..சீரகம், கொத்தமல்லி விதைகள் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை அடிக்கடி பருகி வர குடல் புண் விரைவில் குணமடையும்..காய்கறிகளில் முட்டைக் கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine) வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை உடையது..பிரண்டைக் கீரை அல்லது பிரண்டை சூப் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.