தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ்..இவர் தற்போது ராயன் என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்..இந்த நிலையில் ஐதராபாத்தில் நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-.சரியான சமயத்தில் சரியான வாய்ப்புகள் வந்ததால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என் வளர்ச்சிக்கு காரணம் என் இயக்குனர்கள்தான்..எனது தவறுகளை கூட அவர்கள் விரும்பினார்கள். மன்னித்தார்கள். என்னை உருவாக்கினார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தால் தான் எனக்கு இந்த வளர்ச்சி சாத்தியமானது..இயக்குனர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். அது ஒரு பொறுப்பும் கூட, என்று கூறியுள்ளார்.