இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக.!

Subash

தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
தாளிக்கும்போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க அதை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொண்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.
வற்றல் மிளகாய், பொட்டுக்கடலை ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக்கொள்வது சுகாதாரமானது.
புளிக்குழம்பு, ரசம், போன்றவற்றிற்கு புளியை ஊற வைக்கும்போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்.
காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊறவிட்டு எடுத்தால் பசுமையாக இருக்கு
சோறு குழைந்து விடாமல் இருக்க, சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சில துளிகள் விட்டும் வடிக்கலாம். சோறு பொல பொலவென்றிருக்கும்.
இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை சாற்றில் கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கருத்துப் போகாமல் இருக்கும்.
அரிசியையும், பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்து போட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்து விடுவதுடன் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
Explore