தினத்தந்தி
ஒகேனக்கல் - தூய்மையான நீர்த்தாரைகள் பாறைகளை தாக்கி, அழகாக பொங்கி வழிந்தோடும் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை. மேலும் படகு சவாரி, கிராம உணவு, ஆகியவை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
பிச்சாவரம் - கடலூர் மாவட்டத்திலுள்ள பிச்சாவரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பறவைகளும், 1100 ஹெக்டேர்களில் மாங்க்ரோவ் காடுகளும் காணப்படுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு இடமாகும்.
ஏற்காடு - தேயிலை தோட்டங்கள், அழகிய ஏரி, ரொமாண்டிக் ஸ்பாட், நீர்வீழ்ச்சி ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும். மழைக்காலத்தில் மேகங்கள் மலைகளை சுற்றி வருவது ஒரு காட்சிக் களமாக இருக்கும்.
மேகமலை - காணும் திசையெல்லாம் பசுமையான காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான சூழல் என மேகமலை நம்மை கட்டி போடுகிறது. ஊட்டி, கொடைக்கானலுக்கு மற்றாக கம்மி செலவில் மலை பகுதிக்கு சுற்றுலா போக விரும்புபவர்களுக்கு மேகமலை வரபிரசாதம் என சொல்லலாம்.
கொல்லி மலை - கொல்லி மலைக்கு செல்லும் வழியிலுள்ள 70 கொண்டை ஊசி வளைவுகள் பெரும் சவாலானதாகவும் அதே நேரத்தில் ஆச்சரியமூட்டும் சாலைப் பயணமாக இருக்கும்.
ஏலகிரி - அடர்ந்த காடுகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் மலையேற்றப் பாதைகளுடன் இயற்கையை ரசிக்க ஏற்ற அமைதியான இடமாகும்.
தனுஷ்கோடி - தனுஷ்கோடியில் இருபுறமும் கடலால் சூழப்பட்ட பாதையும், இரு வெவ்வேறு நிறங்களில் தெரியும் கடல்களும் பார்ப்பதற்கு ஒரு தனித்துவமான, அற்புதமான அனுபவத்தைத் தரும்.