உங்களுக்காக பயனுள்ள சமையல் டிப்ஸ்!

தினத்தந்தி

பச்சரிசியை ஊறவைத்து தேங்காய் சேர்த்து அரைத்து பாலில் வேக வைத்து, பாயசம் செய்தால் ருசி அமோகமாக இருக்கும்.

பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்து அடை தயார் செய்து சாப்பிடலாம். வாயு தொல்லை வராது.

அவியல் செய்தவுடன் இறுதியில் தேங்காய் எண்ணெய்யுடன் தயிரும் சேர்த்து கலந்தால் சுவை அள்ளும்.

எலுமிச்சம் பழங்களை ஊறுகாய்க்கு நறுக்கும்போது, அத்துடன் ஒரு பெரிய துண்டு இஞ்சியையும் நறுக்கி சேர்த்தால் ஊறுகாய் மணமாக இருக்கும்.

கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு செய்யும்போது, ஒரு ஸ்பூன் கெட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.

வெண்ணெய் காய்ச்சி இறக்கும் சமயத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்தால், எவ்வளவு நாட்கள் ஆனாலும் நெய் மணமாக இருக்கும்.

பீன்ஸ், கொத்தவரங்காய் வேகவைக்கும்போது ஆரம்பத்திலேயே உப்பு சேர்த்தால் வேக நிறைய நேரம் ஆகும். அதனால் கடைசியில் தான் உப்பு சேர்க்க வேண்டும்.

வடை மாவில் கொஞ்சம் சாதத்தை சேர்த்து பிசைந்து வடை சுட்டால் எண்ணெய் குடிக்காது. மிருதுவான சுவையான வடையும் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு சத்தான பாதாம் பால் செய்வது எப்படி?