திராவிட இயக்கம் முதல் தவெக வரை... வி.எஸ்.பாபுவின் அரசியல் பயணம்!

Subash T

2006 – திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

2006 – வடசென்னை மாவட்ட திமுக செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

2011 – தொகுதி மறுசீரமைப்பில் புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உருவானது. மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால் பாபுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

2011 – திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்தார்.

2016 – அதிமுகவில் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2017 – ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகப் பணியாற்றினார்.

2018 – தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

2022 – எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

2025 – அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

2026 – விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

2026 ஏப்ரல் – கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

நவம்பர் 19, 2026 – உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு, சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2.24 மணிக்கு காலமானார்.

மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை வெப்ஸ்டோரியாகப் படிக்க <strong>இங்கே கிளிக் செய்யுங்கள்!</strong>