மயக்கம் ஏற்பட என்ன காரணம்? அது வராமல் தடுப்பது எப்படி தெரியுமா?
Dinesh
மூளைக்கு தேவையான ரத்தம் செல்ல முடியாமல் தடைபடுவதுதான் மயக்கம் வருவதற்கு முக்கிய காரணம். ஏதேனும் சில காரணங்களால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்கு கீழே நின்று விடும். இதனால் மூளைக்கு செல்லும் ரத்தம் குறைந்து மயக்கம் ஏற்படுகிறது.
Photo: MetaAI
திடீரென மயக்கம் வந்தால் மெதுவாக உட்காருவதற்கு முயற்சி செய்யுங்கள். உட்கார்ந்தவுடன் தலையை முழங்கால்களுக்கு இடையில் வைக்கவும். அப்படி அமர்வது மூளைக்கு ரத்தம் செல்ல உதவும்.
Photo: MetaAI
மயக்கம் வராமல் தடுக்க: நீரிழப்பு மயக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.
Photo: MetaAI
ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் மயக்கம் ஏற்படலாம். சீரான இடைவெளியில் உணவினை சாப்பிடுவது அவசியம்.
Photo: MetaAI
அதிக மன அழுத்தம் மயக்கத்திற்கு வழிவகுக்கும். தியானம் மற்றும் யோகா போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடலாம்.
Photo: MetaAI
இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.
Photo: MetaAI
மயக்கம் ஏற்படுவதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நன்று.