துளசி மாடத்தை அமைக்கும்போது சங்கை வைத்து, அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி, தண்ணீர் தெளித்து மூன்று துளசிச் செடிகளை ஒன்றாக நடும் வழக்கம் சில இடங்களில் காணப்படுகிறது. இந்த மூன்று செடிகளும் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவியை குறிக்கின்றன என்ற ஆன்மிக நம்பிக்கை உள்ளது.