AM மற்றும் PM-க்கு உண்மையான அர்த்தம் என்ன?

தினத்தந்தி

நாம் தினமும் அலாரம் வைக்கும்போது, Time பார்க்கும்போது எல்லாம் AM, PM கவனிக்கிறோம். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் என்ன?

நாம் தினமும் பயன்படுத்துகிற இந்த AM மற்றும் PM ஆங்கில வார்த்தைகள் கிடையாது! இது இரண்டுமே பழைய இலத்தீன் மொழி வார்த்தைகள்.

AM = "Ante Meridiem" Ante என்றால் 'முன்பு' (Before). Meridiem என்றால் 'நண்பகல்' (Midday/Noon). அதாவது, "நண்பகலுக்கு முன்" (Before Noon) என்று அர்த்தம்.

PM = "Post Meridiem" Post என்றால் 'பின்பு' (After). Meridiem என்றால் 'நண்பகல்'. அதாவது, "நண்பகலுக்கு பின்" (After Noon) என்று அர்த்தம்.

பண்டைய எகிப்தியர்கள் பகலை 12 பகுதியாகவும், இரவை 12 பகுதியாகவும் பிரித்தார்கள்.

சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தை (Noon) மையமாக வைத்துதான் இந்த முறை உருவானது.

பிரீஸரில் ஐஸ் கட்டிகள் குவிகிறதா? காரணம் இதோ.!!