என்னது முருங்கை பிசினில் இவ்வளவு நன்மைகளா?

தினத்தந்தி

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் அடர் பழுப்பு நிற பசை போன்ற ஒரு பொருள் தான் முருங்கை பிசின். ரப்பர் போல கெட்டியாக இருக்கும் இந்த முருங்கை பிசினில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன.

முருங்கை பிசினில் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம் போன்ற ஏராளமான சத்துகளும், ஆல்கலாய்டுகள், பிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள், பாலிசாக்கரைடுகள் போன்ற வேதிப் பொருள்களும் நிறைந்துள்ளன.

முருங்கை பிசினை பொடி செய்து அதனை சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மேம்படுத்தப்படும்.

முருங்கை பிசின் பொடியை பாலில் கலந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து அருந்தினால் ஆண்மை அதிகரிப்பதோடு, பாலியல் தொந்தரவுகள் நீங்கும், விந்தணுக்களையும் அதிகரிக்கும்.

ஒரு ஸ்பூன் முருங்கை பிசின் பொடியை வெந்நீரில் கலந்து அருந்துவதன் மூலம் வாயு, தலைவலியில் இருந்து விடுதலை பெறலாம்.

முருங்கை பிசினை தீயில் காட்டி அது உருகியதும் வரும் பசை போன்ற திரவத்தை காதில் ஒரு சொட்டு விட்டால் காது வலி காணாமல் போகும்.

முருங்கை பிசினை தூளாக இடித்து பாலில் கலந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து குடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, முகமும் பொலிவு பெறும்.

முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கை பிசினை தினமும் உண்டு வந்தால் முடி உதிர்தல் குறைந்து, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

பொடி செய்து பயன்படுத்தலாம் : முருங்கை பிசினை உடைத்து அதனை நெய்யில் வறுத்து பவுடர் செய்து வைத்துக் கொள்ளாலாம். இதனை பால் மற்றும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

இந்த குறிப்புகளை மருத்துவரை அணுகியவுடன் பின்பற்றுவது நல்லது.

நாண், சப்பாத்திக்கு.. கொண்டைக்கடலை மசாலா செய்வது எப்படி?