தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்..கார் விபத்தில் சிக்கி சில மாதங்கள் ஒதுங்கி இருந்த அவர் சிகிச்சை பெற்று குணமான பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கிறார்..இந்த நிலையில் யாஷிகா ஆனந்த், நடிகர் ரிச்சர்ட்டை காதலிப்பதாக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது..இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரிச்சர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..அதை பார்த்து ரசிகர்கள், அவர்கள் காதலிப்பதாக பேசி வருகிறார்கள்..இருவர் காதலுக்கும் வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்..ஆனால் காதலை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை..திரவுபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக ரிச்சர்ட் நடித்து இருக்கிறார்..ரிச்சர்ட், அஜித்குமார் மனைவி ஷாலினியின் சகோதரர் ஆவார்.