Dinesh T
மார்பு வலி - மார்பில் அடிக்கடி வலி ஏற்படுவது நல்லதல்ல. குறிப்பாக இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக்கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உடனடி மருத்துவ உதவி பெறுவது அவசியம்.
வயிற்று வலி - திடீரென வயிற்று வலியோ, வயிற்று பிடிப்போ ஏற்பட்டால் குடல் புண், பித்தப்பை கோளாறு போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவதை உணர்த்தலாம். அல்சர், வயிற்று கோளாறு பிரச்சனையாகவும் இருக்கலாம்.
கால் வலி - காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பல் வலி - பல்லில் தொடர்ந்து வலி ஏற்பட்டால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம். உடனடி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அனைத்து பற்களுக்கும் பரவும்
கால்கள் அல்லது பாதங்களில் எரிச்சல் - கால்கள் அல்லது பாதங்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுவதும் நல்லதல்ல. நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டக் குறைபாடு அல்லது வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம்.
திடீர் தோள்பட்டை வலி - தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, சில நேரங்களில் நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் வலியாக இருக்கலாம்.
முதுகு வலி - முதுகின் அடிப்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ வலியை உணர்ந்தால், முதுகின் உட்புறத்தில் நோய்த்தொற்று அல்லது முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
கண் வலி - கண்களில் வலி, அழுத்தம் அல்லது பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது குளுக்கோமா அல்லது கண் தொற்றுகள் காரணமாக இருக்கலாம்.