எங்கள் வேதனையை கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்!

தினத்தந்தி

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இதேபோல, தே.மு.தி.க. இரட்டை இலக்க தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட் சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இவ்விரு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் இடதுசாரிகள் எதிர்பார்க்கும் இடங்களை தருவது சிரமம் என்று கூறிவிட்டு காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதா? என்று கேள்வி எழுப்பி பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், கூட்டணி கட்சிகள் எங்களுடைய வேதனையை புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குற்றச்செயல்களின் அதிகரிப்பு: சமூகத்தின் சீர்கேடு!