பாஜக கூட்டணியில் விஜய்? என்ன நடக்கிறது தவெகவில்!

தினத்தந்தி

தவெக வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக - அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கூட்டணிக்கு பாஜக முயற்சிக்கும் சூழலில், நேற்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்த ஆலோசனையில் 120/132 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டணிக்கு ஆதரவாக 98/120 மாவட்ட செயலாளர்கள் குரல் கொடுத்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், தனித்து போட்டியிடும் முடிவை கைவிட்டு பாஜகவுடன் தவெக கை கோர்க்க போகிறதா என்று அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், இது தொடர்பாக தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்

அதில் "மக்கள் பிரச்சனைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில் தகவல் பரப்பப்படுகிறது" என பதிவிட்டுள்ளார்.

என்.டி.ஏ. கூட்டணிக்கு விஜய் வருவாரா? என்ற கேள்விக்கு, "விஜய் டெல்லி செல்வதற்கும், கூட்டணிக்கு எந்த தொடர்பும் கிடையாது. சிபிஐ மூலம் மிரட்டி விஜய்யை கூட்டணிக்கு வர வைப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பேசுகின்றன" என நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்

தற்போது வரை, த.வெ.க.வில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 174 தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.

த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சர் வேட்பாளருமான நடிகர் விஜய், தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

காளியம்மாள் அதிமுகவை தேர்வு செய்ததற்கு காரணம் என்ன?