தினத்தந்தி
கடந்த காலங்களில் இந்த தொகுதியில் (1967-க்கு பிறகு) தி.மு.க. 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆர்.டி.சேகரும், அ.தி.மு.க. சார்பில் கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.தனபாலனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 267 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் 50 ஆயிரத்து 291 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி 19,821, மக்கள் நீதி மய்யம் 17,072 வாக்குகளையும் பெற்றது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிவேல் 79 ஆயிரத்து 974 வாக்குகளும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.தனபாலன் 79 ஆயிரத்து 455 வாக்குகளையும் பெற்றனர். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அ.தி.மு.க. பக்கம் சென்றது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் மறைவை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 394 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் 38,371 வாக்குகளை பெற்று, 2-ம் இடத்தை பிடித்தார்.
பெரம்பூர் தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளை பொறுத்தே வெற்றி மாறி, மாறி வந்துள்ளது. கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு கனிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதி இது.
தற்போது நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதால் இந்த தொகுதி தற்போது நட்சத்திர அந் தஸ்தை பெற்றுள்ளது.
விஜய் இங்கு களம் இறங்கும் பட்சத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தரப்பில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றே தெரிகிறது. போட்டியும் கடுமையாகவே இருக்கும்.
த.வெ.க.விற்கு இருக்கும் உறுப்பினர் சேர்க்கை, பெண்கள், இளைஞர்கள் ஆதரவை நம்பி இந்த தொகுதியில் களம் இறங்கும் விஜய்க்கு, பெரம்பூர் சாதகமாக இருக்குமா? என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரிய வரும்.