மகரம் - வார பலன்கள்
பேச்சாற்றல் மிக்கவராக விளங்கும் மகர ராசி அன்பர்களே.!
நண்பர்களின் ஒத்துழைப்பு இருந் தாலும் எடுக்கும் முயற்சிகளில் தாமதங்களைத் தவிர்க்க இயலாது. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகப் பணியின் நிமித்தம், வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம். அலுவலகப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாவிட்டால் பிரச்சினைகள் உருவாகக்கூடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர் மூலம், புதிய நபரின் அறிமுகம் கிடைக்கலாம். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் சராசரியான லாபம் இருக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் ஸ்திரத் தன்மையுடைய பங்குகளில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், புதிய ஒப்பந்தங்களில் ஆர்வத்துடன் பணியாற்றுவார்கள். வருமானம் போதுமானதாக இருக்காது. குடும்பத்தினரிடம் சுமுகமாக நடந்து கொண்டால், பிரச்சினைகளை சமாளிக்கலாம்.
பரிகாரம்:- லட்சுமி நரசிம்மருக்கு வியாழக்கிழமை துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.