சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை
வேகத்தோடு விவேகமும் கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் நீ்ச்சம் பெற்றாலும், உச்சம் பெற்ற சுக்ரன் மாத தொடக்கத்திலேயே சூரியனுடன் இணைந்து 'நீச்சபங்க ராஜ யோக'த்தை உருவாக்குகிறார். இதனால் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
துலாம் - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 2-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 3-ம் இடத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். வெற்றிகள் ஸ்தானாதிபதி சுக்ரன் என்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். சகோதர ஒற்றுமை பலப்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பதோடு வேண்டிய உதவிகளை செய்வர்.
துலாம் - புதன் சஞ்சாரம்
ஐப்பசி 6-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சுக்ரனோடு இணைந்திருப்பது மிகமிக அற்புதமான நேரமாகும். தொழில் முன்னேற்றம், கொடுக்கல்- வாங்கல்களில் அதிக லாபம், சுபச் செய்திகள் வரும் சூழ்நிலை அமையும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்பு கள் வரலாம். தன லாபாதிபதி புதன் பலம்பெறும் இந்த நேரத்தில் அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பெண் பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசைகளையும் வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுன-செவ்வாய் வக்ரம்
மாதத் தொடக்கத்தில் மிதுனத்தில் இருக்கும் செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கின்றார். இந்த செவ்வாய் - சனி பார்வை அவ்வளவு நல்லதல்ல. அதோடு ஐப்பசி 18-ந் தேதி செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்களுக்கு யோகம் செய்யும் கிரகம் வக்ரம் பெறுவதாலும், அவர் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் சொத்து விற்பனையால் லாபம் உண்டு. சொந்தங்களையும், சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. திடீர் இடமாற்றம், வீடுமாற்றம் வரலாம். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிக - புதன் சஞ்சாரம்
ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தேங்கி இருந்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். புதிய கட்டிடம் கட்டிக் குடியேறும் யோகம் உண்டு.
விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் ெசல் கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் முன்னேற்றம் உண்டு. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.
குரு வக்ர நிவர்த்தி
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், மாதத் தொடக்கத்தில் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ஐப்பசி 30-ந் தேதி அவர் வக்ர நிவர்த்தியாகிறார். இனி அவரது பார்வைக்கு பலம் அதிகம் கிடைக்கும். எனவே ஆரோக்கியம் சீராகும். அடுத்தடுத்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கி விட்டுப் புதியவர்களை சேர்க்க முன்வருவீர்கள். தனவரவு திருப்தி தரும்.
இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் விநாயகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 23, 24, 28, 29, நவம்பர்: 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சகப் பணியாளர் களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது பிரச்சினைகளை தவிர்க்கும்.