சிம்மம் - வார பலன்கள்
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
பணத் தட்டுப்பாடு காரணமாக மனதில் சஞ்சலம் உருவாகும். பொருளை மறதியாக வைத்துவிட்டு, அதைத் தேடும் சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுக்குள் பகை உணர்வு வரலாம். அரசாங்கத்தில் பணிபுரிவோர் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. கணவன் - மனைவி உறவு கசப்புடன் இருந்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வதால் இனிமை வரும். உறவினர்களால் செலவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. வெளி இடங்களுக்கு செல்லும் போது அதிகம் பேச வேண்டாம். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி காணலாம். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் இருந்தால் ஆலோசிக்காமல் அவசர முடிவு எடுக்க வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அருகில் உள்ள சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபட்டால் மன சஞ்சலம் நீங்கும்.