இன்றைய ராசிபலன் - 20.01.2025


இன்றைய ராசிபலன் - 20.01.2025
x
தினத்தந்தி 20 Jan 2025 6:53 AM IST (Updated: 20 Jan 2025 8:04 AM IST)
t-max-icont-min-icon

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:

குரோதி வருடம் தை மாதம் 7ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று இரவு 9.07 வரை அஸ்தம் பின்பு சித்திரை

திதி: இன்று காலை 10.35 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம்: காலை 6.30 - 7.30

நல்ல நேரம்: மாலை 4.30 - 5.30

ராகு காலம்: காலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

குளிகை மாலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 to 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

ராசிபலன்:-

மேஷம்

மொத்தத்தில் வாழ்க்கையின் திருப்புமுனை அமையும். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். தங்கள் கையிருப்பு அதிகமாகி உங்கள் வங்கி கணக்கு உயரும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. பிள்ளைகள் பெற்றோர்களின் நிலையை உணர்ந்து படிப்பர். ஓய்வு பெற்றவர்களின் நிலுவைத் தொகை கைக்கு கிடைக்கும். வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

பழைய கடன்கள் அடைத்து நிம்மதியடைவீர்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சீர்படும். மனதில் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். பணம் பல வழிகளில் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

வேலையாட்கள் சொல்படி நடப்பர். தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் காலதாமதமாகிறேதே என்று கவலைப்பட்டவர்களுக்கு வீட்டில் விசேஷம் நிச்சயம். ஒரு குறிப்பிட்ட பெருந்தொகையை நீங்கள் வங்கியில் டெபாசிட்டாக சேமிப்பீர்கள். புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள். தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

சிம்மம்

வெளிநாட்டில் படிக்க முயலும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதற்கு வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதியதொரு வியாபாரம் துவங்குவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

அரசு தொடர்பான காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக வரும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். சோர்வாக இருந்தவர்களுக்கு இனி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் கூடும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்யம் உண்டு. நண்பர்களுடன் நீண்ட தூர ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். மகள், மாப்பிள்ளை மூலம் சௌகரியங்கள் கிடைக்கும். புதிய வீட்டில் குடிபுகுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

எந்த ஒரு விசயமானாலும் தம்பதிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுப்பர். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. வழக்குகள் பணப்பிரச்னை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

காதலர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும் காலமாக இருக்கும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். வியாபாரம் செழிப்படையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர். கம்ப்யூட்டர் மற்றும் வீட்டிற்கு தேவையான நவீன பொருட்கள் புதிதாக வாங்குவீர்கள்.பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மீனம்

உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். கொடுக்கல், வாங்கல் கை கொடுக்கும்.புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்






Next Story