அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்.
சென்னை,
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சின்னத்துக்கான படிவத்தில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான படிவத்தில் ஏ, பி பிரிவுகளில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் குறுகிய காலத்துக்கு மட்டுமே தமிழ்மகன் உசேனுக்கு இந்த அங்கீகாரம் வழங்குவதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story